×

பெட்ரோல் பல்க் ஊழியர் தற்கொலை

 

தேவாரம், மே 19: கோம்பை அருகே உள்ள கருக்கோடை மதுரை வீரன் கோயில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் லோகநாதன் (19).லோகநாதன் பிளஸ் 2 முடித்துவிட்டு கோம்பையில் உள்ள தனியார் பெட்ரோல் பல்க்கில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் லோகநாதன் மது குடித்ததை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த லோகநாதன், விஷம் குடித்துவிட்டு மல்லிங்காபுரம் காளவாசல் எதிரே ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி க.விலக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லோகநாதனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

The post பெட்ரோல் பல்க் ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Petrol station ,Thevaram ,Panneerselvam ,Karukoda Madurai Veeran Koil Street ,Gompa ,Loganathan ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...