×

பூ மாலை வணிக வளாகத்தில் சுய உதவி குழுவினர்கள் கடை நடத்த விண்ணப்பிக்கலாம்

 

ஈரோடு,நவ.5: ஈரோடு, பெருந்துறை ரோடு, குமலன் குட்டை பஸ் ஸ்டாப் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் உள்ள 9 கடைகள், மாதாந்திர மற்றும் அரையாண்டு அடிப்படையில் சுய உதவிக்குழுவினருக்கு வாடகைக்கு விடப்பட உள்ளன. மேலும் கடைகளுக்கு வெளியே,வளாகத்துக்குள் உள்ள காலி இடங்களில் கடை வைத்துக் கொள்ள தினசரி அடிப்படையில் வாடகைக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், சுய உதவி குழு உறுப்பினர்களைக் கொண்ட குழு நிறுவனங்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட உள்ளன. அதேபோல சுய உதவி குழுக்களை சேர்ந்த தனிப்பட்ட விற்பனையாளர்களுக்கும் கடைகள் ஒதுக்கப்பட உள்ளன.

இது தவிர வணிக வளாகத்தின் வெளிப்பகுதியில் உள்ள காலி இடத்தில் காய்கறி, கீரைகள் போன்ற பொருள்கள் விற்பனைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களுக்கு திட்ட இயக்குனர், மாவட்ட இயக்கக மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), பூ மாலை வணிக வளாகம், முதல் தளம், பெருந்துறை ரோடு, குமலன் குட்டை, ஈரோடு – 638 011 என்ற முகவரியில் தொடர்பு தொடர்பு கொள்ளலாம்.

The post பூ மாலை வணிக வளாகத்தில் சுய உதவி குழுவினர்கள் கடை நடத்த விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Poo Mala Mall ,Erode ,Poomalai Commercial ,Kumalan Kuttai Bus Stop ,Perundurai Road ,SHGs ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் மது போதையில் ஓட்டி வரப்பட்ட...