×

பூ மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை

திண்டுக்கல்: கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு, மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. திண்டுக்கல்லில் நகரின் மத்தியப்பகுதியில், அண்ணா வணிக வளாக மாடியில், மாநகராட்சிக்கு சொந்தமான பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் அதிகாலை முதல் இரவு வரை செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, பூ மார்க்கெட் அதிகாலை 5 மணி முதல் மதியம் ஒரு மணி வரையே செயல்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பூ மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில்லரை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பூ மார்க்கெட் சங்க செயலாளர் சகாயம் கூறுகையில், ‘பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க மொத்த பூ வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மொத்த வியாபாரிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்தவேண்டும். சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றின்போது பூ மார்க்கெட் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது….

The post பூ மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை appeared first on Dinakaran.

Tags :
× RELATED சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது