×

பூவாளூர் ஜல்லிக்கட்டு மே29க்கு ஒத்திவைப்பு

 

லால்குடி, மே 27: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் திடலில் பந்தாளம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு மே 24ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக, வாடிவாசல் அமைக்கும் பணி, அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் மேடை, ரன்வேயில் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்தது.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்பதற்கான ஆன்லைன் டோக்கன் பதிவும் முடிவடைந்தது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி பெய்த கனமழை காரணமாக தேதி குறிப்பிடாமல் ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டி வரும் 29ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என்று விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

The post பூவாளூர் ஜல்லிக்கட்டு மே29க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Poollur Jallikatu ,Lalgudi ,Jallikatu ,Bandalamman Temple Festival ,Poollur Tidal ,Lalkudi, Tirichi district ,Wadiwasal ,Dinakaran ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்