×

பூந்தமல்லியில் அரசு பஸ் மீது ஏறி பள்ளி மாணவர்கள் ஆட்டம்: வீடியோ வைரலால் பரபரப்பு

பூந்தமல்லி: தமிழகத்தில் கொரோனா 3வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பஸ்களில் பயணிகள் இடைவெளி விட்டு அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது. அவவர்களை போலீசாரும், ஓட்டுநர், நடத்துனர்களும் கண்காணிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில், நேற்று சைதாப்பேட்டையிலிருந்து வெள்ளவேடு சென்ற மாநகர பஸ்சில் பூந்தமல்லி கல்லறை பஸ்  நிறுத்தத்தில் அறிஞர் அண்ணா அரசுப் பள்ளி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஏறினர். அவர்கள் பஸ்சின் மேற்கூரையில் ஏறி அமர்ந்து ஆட்டம் போட்டபடி, `அறிஞர் அண்ணாவுக்கு ஜே’ என்று முழக்கமிட்டபடி சென்றனர். இதைப் பார்த்த பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.  அப்போது அந்த வழியாகச் சென்ற போலீசாரும், ஆசிரியர்களும், பொதுமக்களும் மாணவர்களை மிரட்டி கீழே இறக்கி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அரசும், காவல்துறையும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் எவ்வளவு எடுத்துக் கூறியும் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post பூந்தமல்லியில் அரசு பஸ் மீது ஏறி பள்ளி மாணவர்கள் ஆட்டம்: வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Poonthamalli Poonthamalli ,Tamil Nadu Government ,Corona 3rd wave ,Tamil Nadu ,Corona ,Poonthamalli ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...