×

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பீர் விற்பனை படுஜோர்

புதுக்கோட்டை, ஏப்.17: புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயில் நாளுக்கு நாள் அதிக அளவில் சுட்டெரிப்பதால் பீர் விற்பனை சூடி பிடிக்க துவங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி எடத்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டில் முடங்கினர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்கள் தமிழகத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் மழை பெய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் அனல் காற்று வீசுகிறது. சாலைகளில் கானல் நீர் தென்படுகிறது.

இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை அனுபவித்தனர். இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமல் நீடித்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலால், பிப்ரவரி முதல் ஒரு கடையில் சராசரியாக 500 பாட்டில்களாக இருந்த பீர்விற்பனை, தற்போது ஒரேநாளில் ஆயிரம் பாட்டில்களுக்கு மேல் விற்பனையாகிறது என தெரிகிறது. பீர் வகைகளை குளுமையாக வைத்திருக்கும் வசதி புதுகை டாஸ்மாக் கடைகளில் போதிய அளவு இல்லாததும், அனைத்து வகையான பீர்களும் கிடைக்காததாலேயே கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பீர் விற்பனை குறைந்து காணப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.

மேலும் அனல் காற்றும் வீசுகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதும் குடிமகன்கள் பீர் வகைகளை அதிகம் வாங்குவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கோடை வெயிலும் முடிவடைய இன்னும் பல வாரங்கள் இருப்பதால் இனி வரும் காலங்களில் மதுபான வகைகளுக்கு போட்டியாக பீர்விற்பனையும் விறுவிறுப்படையும் என தெரிகிறது.

இதுகுறித்து டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், பிப்ரவரி தொடங்கியது முதல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் பீர் விற்பனை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. சில நேரங்களில் குடிமகன்கள் கேட்கும் சில முன்னணி நிறுவனங்களின் பீர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடுகிறது. இதனால் சில வாடிக்கையாளர்கள் வருத்தமடைகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் வெயிலின் அளவு அதிகரப்புதான். மேலும் கிராமப்பகுதி மற்றும் நகர் பகுதியில் ஒருசில இடங்களில் பீரை குழுமைப்படுத்த குளிர்சாதன பெட்டி வசதி இல்லாததால் அந்த கடைகளில் பீர் விற்பனை சற்று குறைவாக உள்ளது. குளிர்சாதன பெட்டி வசதி உள்ள கடைகளில் பீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. மேலும் தற்போது வெயில் வெலுத்து வாங்குவதால் குடிமன்கள் பீர் வாங்குவதை ஆர்வம் குறையாமல் இருக்கின்றனர். இதனால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு அகதி அளவு விற்பனை நடைபெறுகிறது என்றனர்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பீர் விற்பனை படுஜோர் appeared first on Dinakaran.

Tags : Badujor ,Pudukottai district ,Pudukottai ,
× RELATED ஒன்றிய அரசு கவுரவ தொகை உடனே வழங்க வேண்டும்