×

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும்

புதுக்கோட்டை, ஏப்.23: புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் அரசு மன்னர் கல்லூரி கிளையின் 4-வது மாநாடு கிளைத் தலைவர் ராரணி பிரியா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பாலாஜி தொடக்கவுரையாற்றினார்.

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2025026 கல்வி ஆண்டு முதல் பிஏ பொலிட்டிக்கல் சைன்ஸ், பிஏ பப்ளிக் அட்மினிஸ்ரேட்டிவ், பிஏ டிபென்ஸ் ஸ்டடி, பிஎஸ்சி விஷ்வல் கம்யூனிகே~ன், பிஎஸ்சி ஜியாக்ரபி உள்ளிட்ட பாடப் பிரிவுகளை உருவாக்க வேண்டும். கல்வி உதவித் தொகையை குறித்த காலத்தில் வழங்க வேண்டும். கல்லூரி உணவகத்தை விரிவு படுத்திட வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

The post புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pudukkottai Government King's College ,Pudukkottai ,Indian Students' Union ,4th conference ,Government King's College ,Rarani Priya… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...