×

புதுக்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

புதுக்கோட்டை,நவ.23: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு வருவாய் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல் ரூ.6,750 அகவிலைப்படி வழங்க வேண்டும், மருத்துவபடி மருத்துவ காப்பீட்டு வழங்க வேண்டும் ஈமச்சடங்கு நிதி 25 ஆயிரம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஒட்டுமொத்த தொகை பலன்களை ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட பிரசவத்திற்கு பின்னும் உரிய ஆலோசனைகளை வழங்கவும், குடும்ப நல முறைகள் மற்றும் குடும்ப கட்டுப்பாடு குறித்த வழிமுறைகளை விளக்கிக் கூறிடவும், மேலும் இந்த கர்ப்பிணி பெண்கள் உரிய சிகிச்சைக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்போது உரிய வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளவும் மாவட்ட அளவில் மாவட்ட தாய் சேய் நல கட்டுப்பாட்டு மையம்” மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

The post புதுக்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Nutrition Pensioners Association ,Pudukottai ,Tamil Nadu Sathunavu ,Anganwadi Pensioners Association ,Satnunu ,Anganwadi ,
× RELATED 2025-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு...