×

புதுக்கோட்டையில் இன்று நடக்கிறது திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

 

புதுக்கோட்டை.மே 6: புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர், அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், நாளை (7ம் தேதி) காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாலையீடு கற்பக விநாயகா திருமண மகாலில் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் அ.சுப்பிரமணியன் தலைமையிலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

The post புதுக்கோட்டையில் இன்று நடக்கிறது திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,South District Executive Committee ,Pudukkottai ,Pudukkottai.May ,Pudukkottai South District ,Minister ,S. Raghupathi ,South ,District ,Executive ,Committee ,Karpaka Vinayaka Wedding Hall ,Pudukkottai, South… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...