- சுகாதார அமைச்சர்
- புதுக்கோட்டை மாவட்டம்
- அறந்தாங்கி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன்
- உலக இரத்த தானம் செய்பவர்கள் தினம்…
அறந்தாங்கி, ஜூன் 19: புதுக்கோட்டை மாவட்டத்தில், அதிக முறை இரத்த தானம் செய்த 6 பேருக்கு தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் விருது வழங்கினார்.
உலக குருதிக் கொடையாளர் தினத்தையொட்டி 50 முறைக்கு மேல் ரத்ததானம் செய்த தன்னார்வலர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 முறைக்கு மேல் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அமீர் அப்பாஸ், ஜபருல்லா, ஜெயமதன் வீரன், கண்ணன், மூர்த்தி, ஆரோக்கியசாமி ஆகிய 6 பேருக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருது வழங்கி கவுரவித்தார்.
The post புதுகை மாவட்டத்தில் அதிக முறை இரத்ததானம் செய்த 6 பேருக்கு சுகாதார அமைச்சர் விருது வழங்கினார் appeared first on Dinakaran.
