- சுகாதார அமைச்சர்
- புதுகை
- காரையூர் வட்டார மருத்துவ அலுவலர்
- பொன்னமராவதி
- தேசிய மருத்துவர்கள் தினம்
- சுப்பிரமணியன்
- அருள்மணி நாகராஜன்
- சென்னை
- வள்ளுவர் கோட்டம்.…
- ஆரோக்கியம்
- தின மலர்
பொன்னமராவதி, ஜூலை 2: தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜனுக்கு சிறந்த மருத்துவர் விருதினை சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தேசிய மருத்துவர் தினம் நிகழ்ச்சி நடந்தது. அதில், மருத்துவத்துறையில் மகத்தான பணி செய்த 50 மருத்துவர்களை பாராட்டி விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சிசு மற்றும் மகப்பேறு மரண விகிதத்தை வெகுவாக குறைத்தும் அதிக சுகப் பிரசவங்கள் மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சைகள், இரத்த சேமிப்பு செயல்பாடு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டமைக்காக புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜனுக்கு, அமைச்சர் சுப்பிரமணியன் சிறந்த மருத்துவர் விருது வழங்கி பாராட்டினார்.
The post புதுகை, காரையூர் வட்டார மருத்துவ அலுவலருக்கு சுகாதார அமைச்சர் விருது வழங்கி பாராட்டு appeared first on Dinakaran.
