×

புதர் சூழ்ந்த மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

 

ஊட்டி,ஆக.26: ஊட்டி ஸ்டேட் பேங்க் லைன் செல்லும் சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் செடி கொடிகள் சூழ்ந்தும், மின் கம்பிகள் உரசியபடியே செல்வதால் விபத்து ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் கமர்சியல் சாலையில் இருந்து ஸ்டேட் ேபங்க், ஜி1 காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,எல்ஐசி., அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு செல்ல நடைபாதை மற்றும் சாலை உள்ளது. கமர்சியல் சாலையில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு நடைபாதையும்,அதன் பின்பு தார் சாலையும் உள்ளது.

இந்த பகுதியில் தொழிலாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள்,லாட்ஜ்கள் உள்ளிட்டவைகள் உள்ளன.இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இருந்தவாறே இருக்கும்.இந்நிலையில் இப்பகுதியில் சாலையோரத்தில் தடுப்புச்சுவரை ஒட்டி மின்கம்பம் உள்ளது. பழமையான இந்த மின் கம்பத்தை சுற்றிலும் கீழிருந்து மேல் பகுதி வரை செடி,கொடிகள் படர்ந்து காணப்படுகின்றன.இதுதவிர பசுமையாக கொடிகள் மின்கம்பிகளிலும் படர்ந்துள்ளது.

பல இடங்களில் மின் கம்பிகள் மீது செடிகள் உரசியபடியே செல்கின்றன.இதனால் பொதுமக்கள் அதிகளவில் இவ்வழியாக நடந்து செல்லும் நிலையில் பொதுமக்களோ அல்லது கால்நடைகளோ எதிர்பாராத விதமாக தொடும் பட்சத்தில் விபத்து ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கிறது. எனவே மின் கம்பத்தின் மீது படர்ந்துள்ள செடி கொடிகளை வெட்டி அகற்றிட மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post புதர் சூழ்ந்த மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty State Bank Line ,Ooty, Nilgiris district ,Dinakaran ,
× RELATED பராமரிப்பின்றி காணப்படும் சாலையோர மரக்கன்றுகள்