×

பிளஸ்2 பொது தேர்வில் 100% தேர்ச்சி நெட்டூர் அரசு பள்ளிக்கு தென்காசி கலெக்டர் பாராட்டு

ஆலங்குளம், மே 21: பிளஸ் 2 பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் பாராட்டி கேடயம் வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் நடந்த பனிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அதன்படி நெட்டூர், சிவகுருநாதபுரம், புளியங்குடி, மாதிரி மேல்நிலைப்பள்ளி மேலகரம், வீரசிகாமணி ஆகிய பள்ளிகளைசேர்ந்த தலைமை ஆசிரியர்கள் சென்றிருந்தனர். அவர்களை மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் கேடயம் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அலுவலர் ரெஜினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பிளஸ்2 பொது தேர்வில் 100% தேர்ச்சி நெட்டூர் அரசு பள்ளிக்கு தென்காசி கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tenkasi Collector ,Nettur Government School ,Alankulam ,Tenkasi District ,Collector ,Kamal Kishore ,Nettur Government Higher Secondary School ,Tenkasi ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...