×

பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கழிப்பிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 

ஊட்டி,செப்.23: ஊட்டி அருகேயுள்ள பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கழிப்பிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டள்ளது.  ஊட்டி அருகேயுள்ள பிங்கர்போஸ்ட் பகுதியில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காக்கா தோப்பு பகுதியில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம், எமரால்டு ஹைட்ஸ் கல்லூரி மற்றும் பள்ளிகள் என ஏராளமான அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால், நாள் தோறும் ஏராளமான மக்கள் பிங்கர்போஸ்ட் பகுதிக்கு வந்துச் செல்கின்றனர்.

அதேபோல், காந்தல் மற்றும் பிங்கர்போஸ்ட் பகுதிகளில் உள்ள மக்களும் இங்கிருந்து அரசு மற்றும் தனியார் மினி பஸ்கள் மூலம் ஊட்டி நருக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில்,பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி கடந்த ஆண்டுகளுக்கு முன் பிங்கர்போஸ்ட் கடை வீதியில் ஒரு நவீன கழிப்பிடம் அமைக்கப்பட்டது. ஆனால், இதனை முறையாக பராமரிக்காத நிலையில், மக்கள் பயன்படுத்த முடியாமல் போனது. இதனால், தற்போது இந்த கழிப்பிடம் மூடி கிடக்கிறது.

இதனால், இப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அவசர தேவைகளுக்கு அல்லல்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இந்த கழிப்பிடத்தை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கழிப்பிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pinkerpost ,Ooty ,Dinakaran ,
× RELATED குன்னூர், ஊட்டியில் குவிந்த சுற்றுலா...