×

பிஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் கார்ப்பரேட் சோசியல் அமைப்பு துவக்கம்

சிவகாசி, ஆக.10: சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் கார்ப்பரேட் சோசியல் அமைப்பின்(சி.எஸ்.ஆர்) தொடக்க விழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கல்லூரியின் இயக்குநர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி தலைமை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் ரைட் கிளப் ஃபார் எஜிகேசன் (ஆர்.சி.இ) ஆலோசகர் சந்தரராஜன், சமூக சேவை, சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலனில் மாணவர்களின் பங்கு குறித்து பேசினார். மேலும் ஆர்.சி.இ மூலம் ‘ஐந்து ரூபாய் பாடசாலை’ என்ற திட்டத்தின் கீழ் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் கல்வி சேவைகளை எடுத்துரைத்தார். மாணவர்களிடம் தன்னார்வ தொண்டு வளர்ப்பதனை நோக்கமாக கொண்டு பி.எஸ்.ஆர் கல்லூரி மற்றும் ஆர்.சி.இ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேலாண்மை துறைத்தலைவர் கண்ணன் மற்றும் பேராசிரியர்கள் வெங்கடேஷ், குருபிரசாத் செய்திருந்தனர்.

The post பிஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் கார்ப்பரேட் சோசியல் அமைப்பு துவக்கம் appeared first on Dinakaran.

Tags : BSR College of Engineering ,Sivakasi ,Social ,Organization ,MoU ,Sivakasi BSR College of Engineering ,Department of Management ,Arun Kumar, Vigneswari ,Chief Minister ,Senthilkumar ,Dean Marichami ,Dinakaran ,
× RELATED பிஎஸ்ஆர் என்ஜினீயரிங் கல்லூரியில் தொழில்நுட்ப மேம்பாட்டு கருத்தரங்கம்