×

பாளை. அருகே சுற்றுலா வேன் – பஸ் நேருக்குநேர் மோதல் 28 பேர் படுகாயம்

நெல்லை, மே 21: பாளை. அருகே சுற்றுலா வேனும் – தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 28 பேர் காயமடைந்தனர். இவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ராமநாதபுரம் மாவட்டம் சக்கரகோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், உறவினர்கள் உள்பட 23 பேர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ேகாயில், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில், வனதிருப்பதி பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டு நேற்று முன்தினம் வேனில் திருச்செந்தூருக்கு வந்தனர். அங்கு சுவாமி தரிசனம் முடித்து விட்டு குலசேகரப்பட்டினம், வன திருப்பதி கோயில்களுக்கு சென்றுவிட்டு நேற்று மதியம் 3 மணியளவில் வன திருப்பதியில் இருந்து நெல்லை, விருதுநகர் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வேனில் சென்று கொண்டிருந்தனர்.

பாளை. அருகேயுள்ள ஆச்சிமடம் அருகே வேன் வந்து கொண்டிருந்த, நெல்லையில் இருந்து சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த வேன் டிரைவர் பழனிசெல்வம் (42), சக்கரகோட்டையை சேர்ந்த செந்தில்குமார் (35), முருகேசன் (60), நந்தினி (39), சுமதி (62), தினேஷ்குமார் (29), பஞ்சவர்ணம் (54) மற்றும் தனியார் பஸ் டிரைவர் பாவூர்சத்திரத்தை சேர்ந்த நடராஜன் மகன் ராம்பிர்லா (32) உட்பட 28 பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வேன் டிரைவர் பழனிசெல்வம் உட்பட 2 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாளை. அருகே சுற்றுலா வேன் – பஸ் நேருக்குநேர் மோதல் 28 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Palai ,Nellie ,
× RELATED பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் கைது