×

பாலத்தில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்து இறந்த காட்டுமாடு

*மலை ரயில் பாதியில் நிறுத்தம்குன்னூர் : குன்னூர்  மலை ரயில் பாதையில் 20 அடி பாலத்தில் இருந்து கால் தவறி தண்டவாளத்தில்  விழுந்து காட்டு மாடு இறந்ததால், மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. நீலகிரி  மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே அடர்ந்த வனப்பகுதி வழியாக  மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த வனப்பகுதியில் யானைகள், கரடி மற்றும்  காட்டு மாடுகள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது தண்டவாளத்தின் அருகே உலா வருவது வழக்கம். இந்நிலையில் குன்னூர் பர்லியாறு பகுதியில்  20 அடி உயரத்தில் இருந்த பாலத்தில் இருந்து காட்டு மாடு ஒன்று கால் தவறி  தண்டவாளத்தில் விழுந்தது. இந்நிலையில் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு மலை ரயில் மூலம் தென்னக ரயில்வே பொது மேலாளர் மல்லையா மற்றும் ரயில்வே அதிகாரிகள் குன்னூர் வந்து கொண்டிருந்தனர். தண்டவாளத்தில் காட்டுமாடு கிடப்பதை கண்ட ரயில் ஓட்டுனர் ரயிலை பாதி  வழியில் நிறுத்தினார். காட்டு மாடு 30 நிமிடமாக உயிருக்கு போராடியது. அதன்பின் உயிரிழந்தது. பின்னர் மலை ரயில்  ஊழியர்கள் அதனை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.  பின்னர் அங்கிருந்து மலை ரயில் புறப்பட்டு சென்றது‌. இதனால் மலை ரயில்  சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக குன்னூர் வந்தடைந்தது….

The post பாலத்தில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்து இறந்த காட்டுமாடு appeared first on Dinakaran.

Tags : Gunnur Mountain ,Dinakaran ,
× RELATED பெரும் பூநாரை (Greater Flamingo)