×

பாரத சாரணிய இயக்கம் சார்பில் முதலுதவி குறித்த சிறப்பு பயிற்சி முகாம்

 

மன்னார்குடி, ஜூலை 2: மன்னார்குடி பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் முதல் உதவியா ளன் சிறப்பு தகுதி காண் சின்னம் பயிற்சி முகாம் கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட முதன் மை ஆணையரும், மாவட்ட இடைநிலை கல்வி அலுவலருமான ராஜேஸ்வரி தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார். மாவட்ட உதவி ஆணை யர் அறிவு, மாவட்ட பொருளாளர் சங்கர், மாவட்ட பயிற்சியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாவட்ட அமைப்பு ஆணையர் லதா வரவேற்றார்.

இதில், தமிழ்நாடு மாநிலக் கழக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் முதலுதவி மற்றும் பேரிடர் மேலாண் மை பயிற்சி களப்பணியாளர் பெஞ்ச மின் கலந்து கொண்டு முதலுதவி என்றால் என்ன, முதலுதவியின் நோக்கம், சாதாரண மயக்கம், மூச்சு திணறல், இதயம் மற்றும் நுரையீரல் ஒருங் கே இயங்க வைத்தல், மீட்பு நிலை, துண்டு பட்ட பாகங்களை இணைத்தல், நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார தாக்குதல், பாம்பு கடி, நாய்க்கடி, பல்வேறு வகையான கட்டுகள் போன்றவற்றை சாரண சாரணியர்கள் மற்றும் திரிசாரணர்களுக்கு பயிற்சி அளித்தார்.

தொடர்ந்து, தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடு களை மாவட்ட செயலாளர் சக்கரபாணி , திரி சாரணர்படை தலைவர்கள் ரமேஷ், பழனிவேல், ரமேஷ் குமார், கிருஷ்ணவேணி ஆகியோர் செய்திருந்தனர். இம்முகாமில் 154 சார ணர்கள், 106 சாரணியர்கள், 63 திரி சாரணர்கள், சாரண ஆசிரியர்கள் வழிகாட்டி தலைவிகள் என 349 பேர் கலந்து கொண்ட னர். முடிவில் மாவட்ட அமைப்பு ஆணையர் செந்தில் குமார் நன்றி கூறினார்.

The post பாரத சாரணிய இயக்கம் சார்பில் முதலுதவி குறித்த சிறப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Bharat Scout Movement ,Mannargudi ,Mannargudi Bharat Scout Movement ,Kottur Government Boys' ,Higher ,Secondary School ,Chief Commissioner ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...