×
Saravana Stores

பாமினி, புருலியா எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருக்கோவிலூரில் நின்று செல்லும்

விழுப்புரம், செப். 26: மன்னார்குடியிலிருந்து திருப்பதி செல்லும் பாமினி எக்ஸ்பிரஸ் மற்றும் புருலியா எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருக்கோயிலில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், இரு ரயில்களின் இயக்கத்தில் கூடுதல் நிறுத்தங்களை சோதனை அடிப்படையில் மேற்கொள்ள ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் வண்டி எண்கள் 17407/17408 திருப்பதி-மன்னார்குடி பாமினி விரைவு ரயில்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருக்கோவிலூரிலும், திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலும் நின்று செல்லும். அதன்படி வண்டி எண் 17407 திருப்பதி-மன்னார்குடி பாமினி விரைவு ரயில் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் போளூர் ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 3.33 மணிக்கு வந்து 3.34 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயில் திருக்கோவிலூருக்கு மாலை 4.28 மணிக்கு வந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும்.

எதிர்வழித்தடத்தில் வண்டி எண் 17408 மன்னார்குடி-திருப்பதி பாமினி வாரம் விரைவு ரயில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருக்கோவிலூர் ரயில் நிலையத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்து 10.32 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் போளூர் ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 11.27 மணிக்கு வந்து 11.28 மணிக்கு புறப்பட்டு செல்லும்.இதேபோல் விழுப்புரம்-புருலியா வாரம் இரு முறை இயக்கப்படும் அதிவேக விரைவு ரயில்கள் சோதனை அடிப்படையில் திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். விழுப்புரத்துக்கு வாரம் இரு முறை இயக்கப்படும் அதிவேக விரைவு ரயில் செவ்வாய், சனிக்கிழமைகளில் புறப்படும். திருக்கோவிலூருக்கு மாலை 5.40 மணிக்கு வந்து மாலை 5.42 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு இரவு 7 மணிக்கு வந்தடையும். விழுப்புரம்-புருலியா வாரம் இரு முறை இயக்கப்படும் அதிவேக விரைவு ரயில் புதன்கிழமை, சனிக்கிழமைகளில் பிற்பகல் 12.15 மணிக்கு விழுப்புரத்திலிந்து புறப்படும். இந்த ரயில் திருக்கோவிலூர் ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 12.44 மணிக்கு வந்து 12.46 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாமினி, புருலியா எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருக்கோவிலூரில் நின்று செல்லும் appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,Villupuram ,Bamini Express ,Mannargudi ,Tirupati ,Thirukoil ,Dinakaran ,
× RELATED 2026 தேர்தலில் எனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம்: அமைச்சர் பொன்முடி பேச்சு