×

பாப்பிரெட்டிப்பட்டியில் லாரி மீது பைக் மோதி 3 வாலிபர்கள் படுகாயம்

 

பாப்பிரெட்டிப்பட்டி, மே 26: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே முள்ளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு மகன் அபினேஷ்குமார்(21). பெயிண்டரான இவர், நேற்று காலை தனது பைக்கில் நண்பர்கள் ராகுல் மற்றும் பரமசிவம் ஆகியோருடன், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து சாமியாபுரம் கூட்ரோடுக்கு சென்றனர். தனியார் வாட்டர் சர்வீஸ் சென்டர் அருகே சென்றபோது, முன்னால் சென்ற சிறிய கன்டெய்னர் லாரி, திடீரென இடது புறமாக திரும்பியது. இதில், எதிர்பாராத விதமாக அந்த லாரி மீது அபினேஷ்குமார் ஓட்டிச் சென்ற பைக் மோதியது. இந்த விபத்தில் அபினேஷ்குமார் மற்றும் நண்பர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து
வருகின்றனர்.

The post பாப்பிரெட்டிப்பட்டியில் லாரி மீது பைக் மோதி 3 வாலிபர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Pappireddipatti ,Prabhu ,Abinesh Kumar ,Mullikadu village ,Dharmapuri district ,Samiyapuram Kootrod ,Rahul ,Paramasivam.… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...