×

பாட்டக்கரை ஆலயத்தில் அசன விருந்து திரளானோர் பங்கேற்பு

நாசரேத், மே 21: பாட்டக்கரை தூய இமானுவேல் ஆலயத்தில் நடந்த அசன விருந்தில் திரளானோர் பங்கேற்றனர். நாசரேத் அருகே உள்ள பாட்டக்கரை தூய இமானுவேல் ஆலய 122வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடந்தது. சேகர தலைவர் ஜெபாஸ் ரஞ்சித் தனராஜ் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்தை தொடங்கி வைத்தார். இதில் திரளானோருக்கு அசன விருந்து வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சேகர தலைவர் ஜெபாஸ், சபை ஊழியர் கிறிஸ்டோபர் மற்றும் விழா குழுவினர், சபை மக்கள் செய்திருந்தனர்.

The post பாட்டக்கரை ஆலயத்தில் அசன விருந்து திரளானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Asana festival ,Patakarai Temple ,Nazareth ,Patakarai Holy Immanuel Temple ,122nd consecration festival ,Sekara ,Jepas Ranjith… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...