×

பாக். ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: 4 வீரர் பலி

கராச்சி: பாகிஸ்தானில் 2 ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 4வீரர்களும் உயிரிழந்துள்ளன. பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில், தனி நாடு கோரி தீவிரவாதிகள் ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றனர். இயற்கை வளங்கள் மிகுந்த இந்த மாகாணத்தில் சீனாவின் பட்டுப்பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதற்கு தீவிரவாத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த மாகாணத்தின் நோஸ்கி, பஞ்கர் மாவட்டங்களில் உள்ள ராணுவ முகாம்களுக்குள் நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகள் உள்ளே நுழைய முயன்றனர். தீவிரவாதிகளை கண்டறிந்த வீரர்கள் உடனடியாக செயல்பட்டு தாக்குதலை தொடங்கினார்கள்.ராணுவ வீரர்களின் துரித நடவடிக்கையால் தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இரண்டு இடங்களிலும் வீரர்கள் கொடுத்த பதிலடியில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகளுடனான மோதலின்போது 4 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் சரண் அடைந்துள்ளனர். இந்த மாகாணத்தை சேர்ந்த ‘பலோசர் விடுதலைப் படை’ என்ற தீவிரவாத அமைப்பு, இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ஷேக் ரசீத் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், நோஸ்கி தாக்குதலில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 4 வீரர்களும் பலியாகினர். பஞ்கரில் வீரர்களின் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த அமைப்பினர் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் 10 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post பாக். ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: 4 வீரர் பலி appeared first on Dinakaran.

Tags : Bach ,Karachi ,Pakistan ,
× RELATED சில்லிபாயிண்ட்….