×

ராணுவ விமான விபத்து மலாவி துணை அதிபர் உட்பட 10 பேர் பலி

லிலொங்வே: ராணுவ விமானத்தில் சென்ற மலாவி துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா விபத்தில் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா. 51 வயதான சவ்லோஸ் சிலிமா 9 பேருடன் ராணுவ விமானத்தில் தலைநகர் லிலொங்வேயில் இருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மசுஸு சர்வதேச விமான நிலையத்துக்கு புறப்பட்டார். அவர் பயணித்த ராணுவ விமானம் லிலொங்வேயில் இருந்து 45 நிமிடங்களில் மசுஸு விமான நிலையத்தில் அடைய வேண்டிய நிலையில், அது மாயமாகியது. இதையடுத்து மலாவி நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா தேடுதல் பணியை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ரேடாருக்கு வெளியில் சென்ற விமானத்துடனான தொடர்பை பெற அணைத்து வகையிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் சிகன்காவா மலைப்பகுதியில் விமானம் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மலாவி துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உள்பட 10 பேரும் ராணுவ விமான விபத்தில் பலியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ராணுவ விமான விபத்து மலாவி துணை அதிபர் உட்பட 10 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Malawi ,vice president ,Lilongwe ,Saulo Chilima ,Savlos Chilima ,
× RELATED இந்தியாவின் முன்னாள் குடியரசு...