×

பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு பணி

பாலக்கோடு, ஏப்.28: பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு பணியை, மண்டல செயற்ெபாறியாளர் ஆய்வு செய்தார்.பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில், சிமென்ட் தரைதளம் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. மேலும், மழை காலங்களில் பள்ளங்களில் தேங்கி நிற்கும் நீரில், பஸ் செல்லும் போது பயணிகள் மீது தெளிப்பதால் அவதிக்குள்ளாயினர். இதையடுத்து, பஸ் ஸ்டாண்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த 2ம் தேதி, உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், புதிய தரைதளம் அமைக்க ₹83.50 லட்சம் நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டினார்.

பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, பணியினை கடந்த 25ம் தேதி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நேற்று தரைதளம் அமைக்கும் பணியை, தர்மபுரி பேரூராட்சிகள் மண்டல செயற்பொறியாளர் மகேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர் சுப்ரமணி, இளநிலை பொறியாளர் பழனி, செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், கவுன்சிலர் ஜெயந்திமோகன், ஒப்பந்ததாரர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

The post பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Palakodu ,Dinakaran ,
× RELATED ரயில்வே அமைச்சரை திமுக எம்பி சந்தித்து மனு