×

ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளியில் பதினோராம் ஆண்டு விளையாட்டு விழா

 

பெரம்பலூர், ஆக. 3: ஹேன்ஸ் ரோவர் பப்ளிக்பள்ளியில் 11ம் ஆண்டு விளையாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. ரோவர் கல்வி குழுமங்களின் மேலாண் தலைவர் திரு. வரதராஜன் , துணை மேலாண் தலைவர் .ஜான் அசோக் வரதராஜன் மற்றும் அறங்காவலர் திருமதி. மகாலட்சுமி வரதராஜன் தலைமை வகித்தனர். இவ்விழாவில், பெரம்பலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திருமதி. சியாமளாதேவி, துணை காவல் துறை கண்காணிப்பாளர் வளவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் மற்றும் பெற்றோர்களுக்காகன சிறப்பு போட்டிகளும் நடத்தப்பட்டது. ரோவர் குழுமத்தின் அலுவலக மேலாளர் ஆனந்தன் மற்றும் கல்வி இயக்குனர் சக்தீஸ்வரன் ஆகியோர் வழிகாட்டுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில், பள்ளி முதல்வர் ஜீன் ஜாக்லின் மற்றும் துணை முதல்வர் விஜயசாந்தி முன்னிலை வகித்தனர். அனைத்து ஆசிரிய பெருமக்கள் ஒத்துழைப்புடன் இவ்விழா இனிதே நிறைவடைந்தது.

The post ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளியில் பதினோராம் ஆண்டு விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Eleventh Annual Sports Festival ,Hanes Rover Public School ,Perambalur ,Aga ,11th Annual Sports Festival ,Rover Education Groups ,Varadarajan ,Deputy ,Managing Director ,John Ashok Varadarajan ,Dinakaran ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க அரை நிர்வாணத்துடன் வந்த ஊராட்சி தலைவர்