×
Saravana Stores

பழநியில் கார்பைடு கல் வைத்து விற்பனை 100 கிலோ மாம்பழங்கள் அழிப்பு: உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அதிரடி

 

பழநி, மே 29: பழநியில் கார்பைடு கல் வைத்து விற்பனை செய்யப்பட்ட சுமார் 100 கிலோ மாம்பழங்களை உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர். பழநி அருகே ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி பகுதிகளில் மா மரங்கள் அதிகளவு உள்ளன. இங்கு செந்தூரா, அல்போன்சா, பங்கனப்பள்ளி, கிரேப், கல்லாமை மா வகைகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.

இங்கு விளைவிக்கப்படும் மா வகைகள் தமிழகனத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது மா சீசன் என்பதால் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விற்பனை செய்ய ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் மா வகைகளில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைக்கப்படுவதாக புகார் கூறப்பட்டு வந்தது.

இதன் அடிப்படையில் நேற்று பழநி உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் தலைமையிலான அதிகாரிகள் 15க்கும் மேற்பட்ட மாம்பழ குடோன்கள் மற்றும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆயக்குடியில் உள்ள 3 மாம்பழ குடோன்களி நடத்தப்பட்ட ஆய்வில் கார்பைட் கல் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட சுமார் 100 கிலோ மாம்பழங்களை கொட்டி அழித்தனர். இதுதொடர்பாக கடையின் கடையின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து அபராதம் வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பழநியில் கார்பைடு கல் வைத்து விற்பனை 100 கிலோ மாம்பழங்கள் அழிப்பு: உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Palani ,Food Safety Department ,Ayakudi ,Balasamutram ,Neykarapatti ,Sentura ,Dinakaran ,
× RELATED பழநி மாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக சிறப்பு யாகம்