×

பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பண்ணை கழிவுகளில் உரம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் விவசாயத்துக்கு பண்ணை கழிவுகளை பயன்படுத்தி உரம் தயாரிக்கும் முகாம் நேற்று நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டரத்தில் அட்மா திட்டத்தின் மூலம், மேளப்பூடி கிராமத்தை சேர்ந்த 40 விவசாயிகளுக்கு பண்ணை கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி நேற்று நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குநர் ரமேஷ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். வேளாண் அறிவியல் நிலைய பேராசியர் மணிமேகலை கலந்து கொண்டு பண்ணை கழிவு மேலாண் திட்டத்தின் கீழ் கரும்பு, நெல் கழிவு பயன்படுத்தி உரமாக்கி, மீண்டும் நிலத்துக்கு பயன்படுத்தி மகசூல் அதிகரிப்பது குறித்து விளக்கி பேசினார். முகாம் ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலைச்செல்வி, அருளானந்தம் ஆகியோர் செய்தனர்….

The post பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பண்ணை கழிவுகளில் உரம் appeared first on Dinakaran.

Tags : Pallipattu Union ,Pallipattu ,Thiruvallur District ,Pallippatu ,union ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்...