×

பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்று தர வேண்டும்

 

பெரம்பலூர்:பெரம்பலூரில் நடைபெற்ற தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்தியசங்கத்தின் வடக்கு மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நலவாரியத் தலைவர் பொன்குமார் பங்கேற்றார். கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்று தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூரில் தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சியின், தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம், பொன்குமார் இளைஞரணி ஆகிய வற்றின் சார்பாக பெரம்ப லூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதி யில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவபெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட கவுரவத் தலைவர் சுந்தரம் வர வேற்றார். மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் பொதுச்செய லாளர் ஜெகதீசன், சிஆர்ஐசி மாநில இணைச்செயலாளர் சிவக்குமார், அமைப்புச் செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட துணைத்தலைவர் பொன்னுசாமி, ஊராட்சித் தலைவர் அன்பழகன், கவுன்சிலர் கருணா நிதி, முன்னாள் ஊராட்சித்தலைவர் முத்துவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

இந்த செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு- கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து தமிழக கட்டிட தொழிலாளர் கள் மத்திய சங்கத்தின் மாவட்ட தலைவராக சிவபெருமாள் தேர்வு செய்யப்பட்டார்.அதேபோல் சங்கத்தின் மாவட்ட செயலாளராக ரமேஷ், மாவட்ட பொருளாளராக ரஞ்சித்குமார், மாவட்ட துணைதலைவராக தண்டபாணி மற்றும் துணை செயலாளர், இணை செயலாளர் என நிர்வாக குழுவில் 5 பேர் செயற்குழுவில் 10 பேர் என மொத்தம் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் 2023ம் ஆண்டுக்கான உறுப்பினர் அட்டையை பெற்றுதருவது, மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தை மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்டி முக்கிய முடிவுகள் எடுப்பது, சங்கத்தின் மாதாந்திர கூட்டத்தை தொடர்ந்து நடத்துவது, சங்க உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலவாரிய உதவித்தொகைகளை பெற்றுத் தருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

The post பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்று தர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,North District Executive Committee ,Tamil Nadu Construction Workers Federation ,Ponkumar ,
× RELATED பெரம்பலூர் நகராட்சியில்...