×

பத்மநாபபுரம் நகராட்சியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி

 

தக்கலை, மே 30 : விலங்குகள் நலவாரிய இயக்குனர் ஆணைப்படி பத்மநாபபுரம் நகராட்சியில் தெரு நாய்களை பிடித்து வெறிநாய் தடுப்பூசி போடும் பணிக்கான பயிற்சி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. நகர் மன்ற தலைவர் அருள் சோபன் நகராட்சி ஆணையாளர் முனியப்பன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் இரா.ராஜேஷ் முன்னிலையில் விலங்குகள் நல வாரிய இயக்குனரக கால்நடை மருத்துவர் டாக்டர் ஜெயகிருஷ்ணா தலைமையில் கால்நடை மருத்துவர்கள் குழு பயிற்சி அளித்தனர் தொடர்ந்து பணியாளர்கள் மூலம் 52 நாய்கள் பிடிக்கப்பட்டு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் இப்பணி தொடர்ந்து நடைபெறும் என நகராட்சி ஆணையர் முனியப்பன் தெரிவித்தார்.

The post பத்மநாபபுரம் நகராட்சியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி appeared first on Dinakaran.

Tags : Padmanabhapuram Municipality ,Thakkalai ,Animal Welfare ,Municipal Council ,Arul Soban ,Commissioner ,Muniyappan… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...