×

பணிமாறுதல்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்: விதைப்பரிசோதனை நிலையம் தகவல்

தஞ்சாவூர், மே.15: பணியிட மாறுதல்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர். பணியிட மாறுதல்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட கூட்டம் மாநில பொதுச்செயலாளர் சோனை கருப்பையா தலைமை வகித்தார். வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவக்குமார், தஞ்சை மாவட்ட ஆலோசகர் தரும. கருணாநிதி, மாவட்ட தலைவர் செந்தில்குமார், மகளிர் அணி தலைவர் கலைச்செல்வி மற்றும் நிர்வாகிகள் பூவந்திநாதன், விமல், அய்யம்பெருமாள், செல்வக்குமார், ஷேக் உமர்ஷா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் தஞ்சை மாவட்டத்தில் தாசில்தார், துணை தாசில்தார் முதுநிலை வரிசை பட்டியலை அரசின் குறியீட்டு தேதியில் வெளியிட வேண்டும். பணியிட மாறுதல்களில் சங்க பாகுபாடு காட்டப்படுவதை தவிர்த்து வெளிப்படைத்தன் மையுடன் பணியிட மாறுதல்கள் இருக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் உயர் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வதையும், ஆய்வு என்ற பெயரில் விடுமுறை நாட்களில் அலுவலகங்களுக்கு பணியாளர்களை வரச்சொல்வதையும் கட்டாயப்படுத்தக் கூடாது என வருவாய் நிர்வாக ஆணையரின் சுற்றறிக் கையை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தவேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு நீதிமன்ற பயிற்சி, காவல்துறை பயிற்சி, நில அளவை பயிற்சி ஆகிய பயிற்சிகளை காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் மாவட்ட நிர்வாகம் அளித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில் துணை தாசில்தார் அசோக்குமார் நன்றி கூறினார்.

The post பணிமாறுதல்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்: விதைப்பரிசோதனை நிலையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Seed Testing ,Thanjavur ,Tahsildars and Sub-Tahsildars Association ,Tamil ,Nadu Tahsildars ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...