×

நெல்லையில் ஜூன் 20ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை, ஜூன் 17: நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 20ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் சுகுமார் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் ஜுன் 2025ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 20ம் தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து கலெக்டர் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடைபெறும் கூட்டத்தில் நெல்லை மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post நெல்லையில் ஜூன் 20ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers' Grievance Redressal Day ,Nellai ,Nellai district ,Collector ,Sukumar ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...