×

நீதியரசர் சுந்தரேஷின் தந்தை வி.கே.முத்துசாமி மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்

திண்டிவனம், ஜூன் 18: சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷின் தந்தையுமான வி.கே.முத்துசாமி மறைவுக்கு பா.ம.க. நிறுவனர், தலைவர் ராமதாஸ் இரங்கல் செய்தி விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: `சென்னை பார் கவுன்சில் நீண்ட உறுப்பினரும் உச்சநீதிமன்ற நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷின் தந்தையுமான வி.கே.முத்துசாமி மறைவு வேதனை தருகிறது. பல இளம் வழக்கறிஞர்களுக்கு அவர் வழிகாட்டியாக திகழ்ந்தார். அவரது மறைவால் துயருற்றுள்ள நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நீதியரசர் சுந்தரேஷின் தந்தை வி.கே.முத்துசாமி மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : PMK ,Ramadoss ,Justice ,Sundaresh ,V.K. Muthusamy ,Tindivanam ,president ,Madras High Court ,Supreme Court ,M.M. Sundaresh ,`Chennai Bar Council… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...