×

நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தரவரிசையில் 2வது இடம் அதிமுக ஆட்சியில் நீர்வாழ் உயிரினங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பின்தங்கிய தமிழ்நாடு: சுத்தமான குடிநீர் பிரிவிலும் பின்னடைவு

திருச்சி: கல்வி, சுகாதாரம்,  வறுமை ஒழிப்பு, பாலின சமத்துவம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட 17 பிரிவுகளில் நீடித்த நிலையான வளர்ச்சியை பெறும் வகையில் உலக நாடுகள் தங்களின் திட்டங்களை வகுக்க வேண்டும் என 2015ல் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 2030க்குள் இந்த இலக்குகளை அனைத்து நாடுகளும் எட்ட வேண்டும் என்று கால நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவில் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் மாநிலங்கள் செயல்பாடுகள் தொடர்பாக நிதிஆயோக் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்படி, 2020 – 2021க்கான தரவரிசை பட்டியலை நிதிஆயோக் வெளியிட்டுள்ளது. ஒட்டு மொத்த தரவரிசையில் 74 புள்ளிகளுடன் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. கடந்த 2019- 2020ல் 67 புள்ளிகளுடன் தமிழகம் 4வது இடத்தில் இருந்தது.இதில் இலக்கு வாரியாக பார்த்தால், வறுமை ஒழிப்பில் 86 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், வேளாண் வளர்ச்சி, உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து பிரிவுகளில் 66 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், தரமான கல்வி பிரிவில் 69 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், நல்ல குடிநீர் பிரிவில் 87 புள்ளிகளுடன் 13வது இடத்திலும், தூய்மையான எரிசக்தி பிரிவில் 100 புள்ளிகளுடன் 12வது இடத்திலும், பொருளாதார வளர்ச்சி பிரிவில் 71 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், தொழிற்சாலை கண்டுபிடிப்புகள் மற்றும் கட்டமைப்பு பிரிவில் 71 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் தமிழகம் உள்ளது.நிலையான வளர்ச்சி உள்ள நகரங்கள் பிரிவில் 79 புள்ளிகளுடன் 10வது இடத்திலும், நுகர்வும் உற்பத்தியும் பிரிவில் 78 புள்ளிகளுடன் 12வது இடத்திலும், பருவநிலை மாற்றம் பிரிவில் 61 புள்ளிகளுடன் 11வது இடத்திலும், பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் கடல் வளர்ச்சி பிரிவில் 11 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், நீடித்த வன மேம்பாடு மற்றும் இயற்கையுடன் சேர்ந்த மேம்பாடு பிரிவில் 63 புள்ளிகளுடன் 17வது இடத்திலும், அமைதியான சூழல் மற்றும் எல்லாருக்கும் பாகுபாடற்ற நீதி கிடைக்க செய்தல் உள்ளிட்ட பிரிவில் 71 புள்ளிகளுடன் 17வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் கடல் வளங்களின் பயன்பாட்டு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சுத்தமான குடிநீர் பிரிவுகளிலும் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது.* வறுமை ஒழிப்பு, சுகாதார வசதியில் முன்னிலை நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்துவதால் பல பிர்காக்கள் ஆபத்தான நிலையில் உள்ளது. தமிழகத்தில் மாங்குரோவ் காடுகளின் பரப்பளவு 8.2 சதவீதம் குறைந்துள்ளது. 9 மற்றும் 10ம் வகுப்பில் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை 10 லிருந்து 13 சதவீமாக உயர்ந்துள்ளது. வறுமை ஒழிப்பு, சுகாதார வசதிகளில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது….

The post நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தரவரிசையில் 2வது இடம் அதிமுக ஆட்சியில் நீர்வாழ் உயிரினங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பின்தங்கிய தமிழ்நாடு: சுத்தமான குடிநீர் பிரிவிலும் பின்னடைவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Trichy ,
× RELATED திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில்...