×

நீடாமங்கலம் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு: ஏராளமான மக்கள் தரிசனம்

நீடாமங்கலம், ஜூன் 24: நீடாமங்கலம் பகுதி சிவாலயங்களில் சிறப்பு பிரதோஷ வழிபாடு ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர். நீடாமங்கலம் காசி விஸ்வநாதர் கோவில், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில், கோவில் வெண்ணி கரும்பேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் சோமவார பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. கோவில்வெண்ணி சௌந்தரநாயகி அம்மாள் சமேத வெண்ணி கரும்பேஸ்வரர் கோவிலில் சுவாமி, அம்பாள், நந்திகேஸ்வரர் சன்னதி களில் சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை கட்டப்பட்டது. பிரதோஷ விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post நீடாமங்கலம் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு: ஏராளமான மக்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Shiva temples ,Needamangalam ,Needamangalam Kashi Vishwanathar Temple ,Poovanur Chathuranga Vallabhanathar Temple ,Kovil Venni Karumbeswarar ,Temple ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...