×

நீடாமங்கலம் பகுதிகளில் வாய்க்கால் தூர் வாரும் பணி

 

நீடாமங்கலம், மே 26: நீடாமங்கலம் பகுதிகளில் வாய்க்கால் தூர் வாரும் பணியை சென்னை ஸ்வர்மா கண்காணிப்பு பொறியாளர் ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 162 தூர்வாரும் பணிகள் 1327.39 கிமீ தூரத்தில் ரூ.1760.05 லட்சம் மதிப்பீட்டில் நடை பெற்று வருகிறது. இதில் வெண்ணாறு வடிநிலக்கோட்டம் தஞ்சாவூர் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 69 பாசன மற்றும் வடிகால் தூர்வாரும் பணிகள் ,536 கி.மீ தூரம் ரூ.652.50 லட்சம் மதிப்பீட்டில் நடை பெற்று வருகிறது.
இப் பணிகளை திருவாரூர் மாவட்டத்திற்கான ஆய்வு அலுவலரும் சென்னை ஸ்வர்மாகண்காணிப்பு பொறியாளர் ராமலிங்கம் நீடாமங்கலம் வட்டாரத்தில் சாமந்தன்காவேரி வாய்க்கால், கொண்டியாறு வாய்க்கால், தெற்கு ராசன் வாய்க்கால் , பழைய நீடாமங்கலம் வாய்க்கால் , கற்கோவில் வாய்க்கால்கள் தூர்வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில் பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.ஆய்வின் போது வெண்ணாறு வடிநிலக்கோட்டம் தஞ்சாவூர் செயற்பொறியாளர் ஆனந்தன், உதவிசெயற்பொறியாளர் கனகரத்தினம் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.

The post நீடாமங்கலம் பகுதிகளில் வாய்க்கால் தூர் வாரும் பணி appeared first on Dinakaran.

Tags : Nidamangalam ,NEEDAMANGALAM ,CHENNAI SWARMA ,RAMALINGAM ,Tamil Nadu Government Water Department ,Thiruvarur district ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...