×

நீடாமங்கலம் ஒன்றியத்தில் இந்திய கம்யூ.கட்சி சார்பில் 33வது கிளை மாநாடு

நீடாமங்கலம், மே 29: நீடாமங்கலம் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 33வது கிளை மாநாடு நடைபெற்றது. புதுத்தேவங்குடியில் உள்ள மறைந்த எம்.பி,எம்.செல்வராஜ் மற்றும் நடேச.தமிழார்வன், மணியரசன் ஆகியோரின் நினைவரங்கத்தில் வெள்ளிநாதன் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக் கொடியினை மூத்த உறுப்பினர் தட்சிணாமூர்த்தி ஏற்றிய நிலையில், லெனின் வரவேற்றார் அதனை தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும், மாநில நிர்வாக குழு உறுப்பினருமான வை.செல்வராஜ் எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் பாரதி மோகன், மாவட்ட குழு உறுப்பினர் அறிவழகன், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் டமார்க்ஸ், காமராஜ் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் பாலமுருகன், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட பொருளாளர் கோபி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி அரசியல் விளக்க உரை ஆற்றினர்

மாநாட்டில் கிளை செயலாளராக லெனின், துணை செயலாளராக அபிமன்யு, பொருளாளராக சுகேந்திரன் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது, தேவங்குடியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையை தினந்தோறும் திறந்து வைத்திட வேண்டும். பழந்தேவங்குடி முதல் விழல்கோட்டகம் வரை உள்ள கப்பி சாலையை தார் சாலையாக அமைத்திட வேண்டும். தேவங்குடி மயான சாலையை செப்பனிட வேண்டும். கோரையாறு முதல் அரிச்சபுரம் பெரிய வாய்க்காலை உடனடியாக தூர்வாரிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. இறுதியாக ஆனந்த் நன்றி கூறினார்.

The post நீடாமங்கலம் ஒன்றியத்தில் இந்திய கம்யூ.கட்சி சார்பில் 33வது கிளை மாநாடு appeared first on Dinakaran.

Tags : Indian ,Needamangalam Union ,33rd Branch Conference ,NEEDAMANGALAM ,INDIA ,M. ,Puduthavangudi B ,M. Selvaraj ,Nadesa ,Silvinathan ,Tamilharavan ,Maniyarasan ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...