×

நிலக்கோட்டை நடராஜர் கோயிலில் வருடாபிஷேகம்

 

நிலக்கோட்டை, மே 31: நிலக்கோட்டை நான்கு ரோடு சந்திப்பில் அமைந்துள்ள  நடராஜர் கோயிலில்வருடாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோயில் மண்டபத்தில் சிவாச்சாரியர்கள் தலைமையில் புனித கும்பங்களுடன் யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நடராஜருக்கு தேன், பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர் உள்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடராஜருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பின்னர் உலக நன்மை வேண்டி அனைத்து மதத்தினரும் நன்மை பெறும் விதமாக வசோர் தாரா யாகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post நிலக்கோட்டை நடராஜர் கோயிலில் வருடாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Nilakottai Nataraja Temple ,Nilakottai ,Nataraja Temple ,Shivacharyas ,Annual consecration ceremony ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...