×

நிலக்கோட்டை ஆவாரம்பட்டியில் மயானங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவக்கம்

 

நிலக்கோட்டை, நவ. 23: நிலக்கோட்டை ஒன்றியம் எத்திலோடு ஊராட்சி ஆவாரம்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் உத்தரவுப்படி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் முயற்சியில் ஒன்றிய பொது நிதியில் 3 மயானங்களுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்க தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய ஆள்துளை கிணறுகள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மணிகண்டன் பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் தியாகு, ஒன்றிய துணை செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுமாறன், கிராம அம்பலகாரர் ராஜா, ஊர் முக்கியஸ்தர் அம்மாவாசி, அரசு ஒப்பந்ததாரர்கள் செல்வக்குமார், கவின் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post நிலக்கோட்டை ஆவாரம்பட்டியில் மயானங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Mayanam ,Nalakkottai Aawarammati ,Minister of Rural Development ,Peryasami ,Palani MLA ,EU General Fund ,Nakhkottai Aawarammati ,
× RELATED உப்பிலியபுரம் அருகே பொது மயானம் சீரமைக்கப்படுமா?