×

உப்பிலியபுரம் அருகே பொது மயானம் சீரமைக்கப்படுமா?

 

துறையூர், நவ.22: திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள கோட்டைப்பாளையம் கிராமத்தில் உள்ள பொது மயானத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உப்பிலியபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டப்பாளையம் ஊராட்சியில் உள்ள இந்துக்களுக்கு பொது மயானம் உள்ளது. இந்த மயானம் முழுவதும் புல் பூண்டு செடிகள் முளைத்து புதர்மண்டி கிடக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாகவே மயானம் சீரமைக்கப்படாமல் உள்ளது. மயானத்தின் பாதையில் திறந்த வெளி மலம் கழிப்பதாகவும், இறந்தவர்கள் உடலை எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்த கூட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பொது மயானம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் ,ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுச்சுவர் கட்டித் தருமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மயானத்தை சுற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச்சுவர் அமைத்து சீரமைத்து தர வேண்டுமென இப்பகுதி மக்கள்,சமூக ஆர்வலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

The post உப்பிலியபுரம் அருகே பொது மயானம் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : UPLIYAPURAM ,Kottipalayam village ,Trichy district ,Hindus ,Kottappalayam Oratchee ,Upliyapurama Union ,Ubiliapuram ,
× RELATED துவரங்குறிச்சி பகுதியில் வீடுகளை அட்டகாசம் செய்யும் குரங்கு கூட்டம்