×

நியாய விலைகடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஏப்.24:சிவகங்கையில் தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பதற்காக ஏற்கெனவே இருந்த 40 சதவீத முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். நுகர்பொருள் வாணிப கழகத்தின் எடைத் தராசும், அந்த அலுவலக கணினியுடன் இணைத்து ரசீது வழங்கிய பிறகே நியாயவிலைக் கடை எடைத் தராசை விற்பனை முனையத்துடன் இணைக்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கு தனித் துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் சரியான எடையில்,

தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான 3 நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிவகங்கை வட்டத்தலைவர் கௌரி தலைமை வகித்தார். செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் ராஜசேகர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ேதவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். வட்டாரத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் இரண்டாம் நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post நியாய விலைகடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Fair Price Shop Workers ,Sivaganga ,Tamil Nadu Fair Price Shop Workers Association ,Consumer Goods Corporation ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...