×

நார்த்தாமலை தேர்திருவிழா: உள்ளூர் விடுமுறைக்கு பதில் சனி, ஞாயிறு வேலை நாளாக அறிவிப்பு

புதுக்கோட்டை, ஏப். 18: புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா ஏப்ரல் 7ம் தேதி நடைபெற்றது. இதை தொடர்ந்து அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக நாளை (19ம் தேதி) சனிக்கிழமை பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணிநாள் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஏற்கனவே பணி நாளாக அறிவிக்கப்பட்ட 19ம் தேதி தொடர்விடுமுறைகள் வருவதால் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் 26ம் தேதி சனிக்கிழமை பணி நாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்படுகிறது என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

The post நார்த்தாமலை தேர்திருவிழா: உள்ளூர் விடுமுறைக்கு பதில் சனி, ஞாயிறு வேலை நாளாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Narthamalai Therthiruvizha ,Pudukkottai ,Therthiruvizha ,Muthumariamman Temple ,Narthamalai ,Kulathur taluka ,Pudukkottai district ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...