×

நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

 

நாகர்கோவில், ஜூன் 26: பி.எஸ்.என்.எல். மொபைல் சேவை மற்றும் டேட்டா சேவையின் தரத்தை உயர்த்திட வேண்டும். 4 ஜி சேவையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தரமான 4 ஜி சேவை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கங்கள் இணைந்த ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் உள்ள பொது மேலாளர் அலுவலகம் முன் நேற்று காலை நடைபெற்றது. பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஓய்வூதிய ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுயம்புலிங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் இந்திரா, மீனாட்சி சுந்தரம், ராஜகோபால், ஆறுமுகம், செல்வம் உட்பட பலர் பேசினர். தமிழ்நாடு தொலைத் தொடர்பு துறை ஊழியர் சங்க மாநில நிர்வாகி பழனிச்சாமி போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு பென்ஷன் அசோசியேஷன், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil B. S. N. L. EMPLOYEE UNION FEDERATION DEMONSTRATION ,Nagarko ,S. N. L. ,Nagercoil B. S. N. L. Employee Union Federation ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...