×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22ம் தேதி வரை பயிர்காப்பீடு செய்யலாம்

 

நாகப்பட்டினம்,நவ.18: நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நடப்பு ஆண்டிற்கான சம்பா, தாளடி நெற்பயிர் காப்பீட்டிற்கான கால வரம்பு வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி நெற்பயிர் காப்பீட்டிற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர் முயற்சியால் சம்பா, தாளடி நெற்பயிர் காப்பீட்டிற்கான கால வரம்பு வரும் 22ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே விவசாயிகள் நலன் கருதி பொது சேவை மையங்கள் ஞாயிற்றுகிழமைகளிலும் (19ம் தேதி) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சம்பா, தாளடி நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22ம் தேதி வரை பயிர்காப்பீடு செய்யலாம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளையும்...