நாகப்பட்டினம், மே 29: நாகப்பட்டினம் கோட்டைவாசல் பகுதியில் நகராட்சி வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பை கிடங்கில் தீயிட்டு கொளுத்தப்படுவதால் அதிகளவில் கரும்புகை வெளியேறி அருகில் வசிக்கும் பொதுமக்களை பாதிக்க செய்கிறது. நாகப்பட்டினம் தஞ்சாவூர் பிரதான சாலை அருகே குப்பை கிடங்கு அமைந்துள்ளதால் அங்கிருந்து வெளியேறும் கரும்புகையால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் உள்ளனர்.
அருகில் உள்ள பூங்காவில் சிறுவர்கள் விளையாட முடியாமலும் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலையும் உள்ளது. அதிக புகை பரவுவதால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
The post நாகப்பட்டினம் நகராட்சி குப்ைப கிடங்கில் இருந்து கரும்புகை வெளியேறுவதால் மக்கள் அவதி appeared first on Dinakaran.