×

நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

நாகப்பட்டினம், ஜூலை 5: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் அந்துவண்சேரல் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சென்னையில் தமிழ்நாடு தொழிற் பயிற்சி நிலைய பணியாளரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் தர், வட்ட தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam Government ,Employees Association ,Nagapattinam ,Nagapattinam Taluka Office ,Tamil Nadu Government Employees Association ,District Treasurer ,Antuvanseral ,Former ,District Secretary ,Anbazhagan ,Tamil Nadu Industrialists Association ,Chennai… ,Association ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...