×

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சமுதாய அரங்கம் கட்ட பூமிபூஜை

 

ராஜபாளையம், டிச.11: ராஜபாளையம் அருகே நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சமுதாய அரங்க பூமி பூஜை. ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் கிழவிகுளம் ஊராட்சி முத்தாநதி கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்காளிப்புடன் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய அரங்கம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய தலைவர் சிங்கராஜ் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் முத்துவாழி மற்றும் ஊர் நாட்டாண்மை ரமேஷ், கணக்காளர் தேவகனி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

The post நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சமுதாய அரங்கம் கட்ட பூமிபூஜை appeared first on Dinakaran.

Tags : Bhumi Puja ,Rajapalayam ,Bhoomi Puja ,Rajapalayam Panchayat ,Bhumi Pooja ,Dinakaran ,
× RELATED விதை பதப்படுத்தும் இயந்திர கொட்டகை