திருவாரூர், ஜூலை 25: திருவாரூர் மாவட்டத்தில் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொது மக்கள் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளுமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,நத்தம் இணையவழி பட்டாமாறுதல் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர், நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி ஆகிய வட்டங்களில் இத்திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் https://tamilnilam.tn.gov.in/citizen வழியாக விண்ணப்பிக்கலாம். அதனடிப்படையில், நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணையவழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நத்தம் பட்டா வழங்கப்படும். மேலும், கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போர்டல் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
The post நத்தம் பட்டா மாறுதலுக்கு இணையதளம் பயன்படுத்தலாம் appeared first on Dinakaran.