×

நத்தம் குடகிப்பட்டியில் மரக்கன்றுகள் நடவு

நத்தம், ஜூன் 7: நத்தம் அருகே குடகிப்பட்டியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், பள்ளி வளாகங்களின் பகுதிகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நிழல் மற்றும் பலன் தரும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ஊராட்சி செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிப்டன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் மக்கள் நலப்பணியாளர் மாணிக்கம் மற்றும் ஊராட்சி பணியாளர்கள், பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

The post நத்தம் குடகிப்பட்டியில் மரக்கன்றுகள் நடவு appeared first on Dinakaran.

Tags : Natham Kudakipatti ,Natham ,Panchayat Council ,Kudakipatti ,World Environment Day ,Panchayat ,Selvaraj ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...