×

நங்கநல்லூரில் நீர்நிலை அருகில் வசிக்கும் 1,000 பேருக்கு கொசு வலை: அமைச்சர் வழங்கினார்

ஆலந்தூர்: நங்கநல்லூரில் நீர்நிலை அருகில் வசிக்கும் 1,000 பேருக்கு கொசு வலைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். நங்கநல்லூரில் உள்ள ஆலந்தூர் 165வது வார்டு அலுவலகத்தில், சென்னை மாநகராட்சி பொது சுகாதார துறை சார்பில், நீர்நிலைகள் அருகில் வசிப்பவர்களுக்கு கொசு வலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. மண்டல சுகாதார நல அலுவலர் சுதா தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், சுதா நாஞ்சில் பிரசாத், முன்னாள் கவுன்சிலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு 1000 பேருக்கு கொசுவலைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், வடக்கு பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், மாமன்ற உறுப்பினர் சாலமன், ஆலந்தூர் மண்டல செயற்பொறியாளர் முருகவேல், உதவிப் பொறியாளர் அலமேலு, திமுக நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள் ஏசுதாஸ், ஜெ.நடராஜன், காங்கிரஸ் சார்பாக வி.ரமேஷ், ஏ.வி.தனசேகரன், அய்யம்பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

The post நங்கநல்லூரில் நீர்நிலை அருகில் வசிக்கும் 1,000 பேருக்கு கொசு வலை: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Nanganallur ,Alandur ,Thamo Anparasan ,Nanganallur… ,Dinakaran ,
× RELATED நங்கநல்லூரில் அம்மன் கோயில் மேற்கூரை...