×

நகராட்சியில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தர்மபுரி, ஏப்.23: தர்மபுரி நகர மக்களுக்கு குடிநீரானது, பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து, விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீரும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பஞ்சப்பள்ளியிலிருந்து குடிநீர் கொண்டு வரும் குடிநீர் குழாய் பாலக்கோடு அருகே மல்லாபுரம் மற்றும் பழைய தர்மபுரி பகுதிகளில் பழுதாகி தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் இன்று (23ம்தேதி) ஒரு நாள் மட்டும் தர்மபுரி நகராட்சியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதாலும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக சேமித்து பயன்படுத்துமாறு ஆணையர் சேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post நகராட்சியில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Panchapalli Chinnaru dam ,Palacode ,Okenakkal Joint Drinking Water ,Tamil Nadu Drinking Water Drainage Board ,Panchapalli… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...